பிலிப்பைன்ஸில் ஃபங்-வாங் என்ற புயல் தாக்கியதால் சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸில் சில வாரங்களுக்கு முன், கல்மேகி புயல் கரையைக் கடந்தபோது கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 220 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஃபங்-வாங் என்ற புயல் தாக்கியதால் கடற்கரையோரங்களில் காற்றின் வேகம் 230 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருவதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால், பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
















