நடிகை கவுரி கிஷனின் உடல் எடைகுறித்து அநாகரிகமாகக் கேள்வி எழுப்பிய யூடியூபருக்கு, நடிகர் ரகுமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரகுமான், உதகையில் தான் படித்த பள்ளியின் 50-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடிகை கவுரி கிஷன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யூடியூபருக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்பு திரைத்துறையினர் ஒரு தவறு செய்தால்கூட, அதனை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் இருந்ததாகவும், தற்போது ஒரு கூட்டமே திரைத்துறையினரை குறிவைத்து புறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
















