ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்க ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
மேற்கத்திய தடைகளை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதற்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அவர் விதித்திருந்தார். வர்த்தக பதட்டங்களை தவிர்க்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்தியா , ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதாக டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்க ஐரோப்பிய ஒன்றிய நாடான ஹங்கேரிக்கு மட்டும் அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ரஷ்ய எரிசக்தி மீதான அமெரிக்க தடைகளில் இருந்து ஹங்கேரிக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு உலக அரங்கில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
















