அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத கழிவுப்பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கடந்த மாதம் மட்டும் மத்திய அரசுக்கு 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் இடப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2021ம் ஆண்டு முதல், துாய்மை மிஷன் 2.0 திட்டத்தில் அலுவலக கழிவுகளைச் சேகரித்து விற்பனை செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கடந்த மாதம் மட்டும் மத்திய அரசுக்கு 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கழிவுபொருட்களை விற்றதன் மூலம் கிடைத்த இந்தத் தொகை, 615 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் சந்திரயான்-3 திட்டத்தின் செலவைவிட அதிகம் ஆகும்.
கடந்த 2021-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து, இதுவரை 4 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாயாகக் கிடைத்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
துாய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் அரசு அலுவலகங்களில் சுமார் 928 லட்சம் சதுரஅடி இடத்தில் இருந்த தேவையில்லாத கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















