ஆழியார் – வால்பாறை சாலையில் நடமாடும் காட்டு யானையை வீடியோ எடுப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் – வால்பாறை சாலையில், யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் ஆழியார் சோதனை சாவடி அருகே நடந்து சென்ற காட்டு யானையைச் சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்தனர்.
இது இணையத்தில் வைரலான நிலையில், வனவிலங்குகள் அருகே செல்பவர்கள், வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
















