மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விக்கெட் கீப்பராகச் செயல்பட்ட ரிச்சா கோஷிற்கு டி.எஸ்.பி. வேலையும் 34 லட்சத்திற்கான ரொக்க பணமும் வழங்கி மேற்கு வங்க அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டு இறுதிப் போட்டியில் 34 ரன்கள் எடுத்த ரிச்சா கோஷை மேற்கு வங்க அரசு பாராட்டியுள்ளது.
அவருக்கு 34 லட்சம் ரூபாய்க்கான ரொக்கப் பணத்துடன், டி.எஸ்.பி. ரேங்க் அளவிலான அரசு வேலையும் வழங்கிக் கவுரப்படுத்தி உள்ளது.
















