வியட்நாமில் கல்மேகி புயலால் ஒரு மீனவ கிராமமே சின்னாபின்னமான வீடியோ காட்சிகள் வெளியாகிக் காண்போரை கலங்கச் செய்துள்ளது.
தாய்லாந்து வளைகுடாவில் உருவான கல்மேகி புயல், தென்கிழக்கு ஆசியா முழுதும் பெரும் பாதிப்பையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பிலிப்பைன்சை தாக்கிய இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, அந்நாட்டில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வியட்நாமை தாக்கிய கல்மேகி புயல், ஒரு மீனவ கிராமத்தையே சின்னா பின்னமாக்கியுள்ளது. புயல் தாக்கியதில் கிராமத்தின் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து படகுகளும் சேதமடைந்தன.
இதனால் வாழ்வாதாரம் இழந்துள்ள மீனவர்கள், அரசு ஏதேனும் உதவி செய்யுமா என எதிர்நோக்கி காத்துள்ளனர்.
















