மத்திய அரசு அலுவலகங்களில் பயனில்லாத பழைய பொருட்களை அகற்றியதில் சுமார் 4 ஆயிரத்து 89 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் இல்லாத பழைய பொருட்கள், பழுதான வாகனங்கள் ஏலம் விடப்பட்டு வருவாய் ஈட்டப்படுகிறது.
அதன்படி கடந்த 2021 ஆண்டு முதல் தற்போது வரை மத்திய அரசின் அலுவலகங்களில் இருந்த, பழைய பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் போன்ற கழிவுகளை அகற்றியதில், 4 ஆயிரத்து 88 கோடியே 53 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு மட்டும் 788 கோடியே 53 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் இது சந்திரயான் – 3 திட்டச் செலவுக்கானதை விட அதிகவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















