தமிழகத்தில் இன்று 3 இடங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 2021ம் ஆண்டு நடைபெறவில்லை.
இந்தநிலையில் இப்பணியானது, 2027 பிப்ரவரி மாதம் நடக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான முன்னோட்டமாக, மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியிலும், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று நடைபெற உள்ளது.
இதில் 34 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















