கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என யாராக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரலாம் என அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஒசகெரே ஹள்ளியில் உள்ள பி.இ.எஸ் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், எந்த அரசியல் கட்சியையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கவில்லை என தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் யாருடைய சாதி, மதத்தையும் நாங்கள் பார்ப்பதில்லை என கூறிய மோகன் பாகவத், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என யாராக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரலாம் எனத் தெரிவித்தார்.
மத அடையாளங்களுடன் வரும் யாருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இடம் இல்லை எனவும் உறுதிபடக் கூறினார்.
















