ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்ததாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவரை, ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே கைதான மருத்துவர் அடில் அகமது ரதரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்களைச் சேமித்த குற்றத்திற்காக மேலும் ஒரு மருத்துவரைப் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
















