தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிப்பர் லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தின் ராஜேந்திரநகரில் உள்ள மைலார் தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுவர் சிறுமியர் ஆறுபேர் சாலையோரத்தில் நடந்து சென்றனர்.
அப்போது சாலையின் வளைவில் டிப்பர் லாரி ஒன்று திரும்பியது. இதனை அறியாமல் பேசிக் கொண்டே சென்ற ரியான் உதின் என்ற சிறுவன் லாரியின் பின்பக்க டயரில் சிக்கிக் கொண்டான்.
சிறுவர்கள் சாலையோரத்தில் நடந்து வருவதை அறியாமல் டிப்பர் லாரி ஓட்டுநர் வளைவில் திரும்பியதால் ரியான் உதின் என்ற 8 வயது சிறுவன் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















