ரஷ்யாவில் உள்ள இந்திய தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இருநாடுகளுக்கு இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
பிரதமர் மோடியும், ரஷ்யா அதிபர் புதினும் நல்ல நட்புறவுடன் இருக்கின்றனர். இந்த நிலையில், அடுத்த மாதம் டெல்லியில் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
அப்போது இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
















