விழுப்புரத்தில் இளம் பெண்ணை காவலர்களே பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகக் கொடுமையான செயல் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகக் கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில்,
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்றும் திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
குற்றம் செய்பவர்களுக்குக் காவல்துறை மீது சிறிதும் பயம் இல்லாத சூழல் உள்ளது என்றும் “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
விழுப்புரத்தில் இளம் பெண்ணை காவலர்களே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்றும் காவலர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகக் கொடுமையானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
















