எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வடகிழக்கு இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மிகப்பெரிய அளவிலான ராணுவ போர் பயிற்சியை இந்தியா தொடங்க உள்ளது.
வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் மற்றும் துருக்கியத் தூதுக்குழுவுடனான சந்திப்புகளின்போது, அசாமைத் வங்கதேசத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் சர்ச்சைக்குரிய வடகிழக்கு இந்தியாவின் வரைபடம் பகிர்ந்தார்.
இதனால் இந்தியா – வங்கதேசம் எல்லைகுறித்த பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து சீனா, பூட்டான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய எல்லைகளை ஒட்டி வடகிழக்கு இந்தியாவில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய ராணுவம் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை மேற்கொள்கிறது.
இந்தப் பிரமாண்ட ராணுவ பயிற்சியில் இந்தியாவின் முன்னணி போர் விமானங்களான Su-30MKI, ரஃபேல், மிராஜ்-2000, தேஜாஸ் மற்றும் ஜாகுவார் ஆகியவை விண்ணில் பறக்க உள்ளன.
இந்த விரிவான விமானப்படைப் பயிற்சி, இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புத் திறனையும், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் உறுதியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
















