SIR பணி என்றாலே திமுக அலறுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாகக் கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில்,
இறந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது என்றும் இடம் பெயர்ந்தவர்களின் பெயரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று வருகிறது என்று அவர் கூறினார்.
தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதுதான் SIR பணியின் நோக்கம் என்றும் SIR பணி என்றாலே திமுக அலறுகிறது என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
இறந்தவர்களின் பெயர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே SIR பணியை திமுக எதிர்க்கிறது என்றும் திருட்டு ஓட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே SIR பணியை திமுக எதிர்க்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
















