சென்னை கண்ணம்மாபேட்டையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஏராளமானோர் தங்களுடைய செல்லப்பிராணிகளை அழைத்து வந்து உரிமம் பெற்றுச் சென்றனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் 4 மண்டலங்களில் நடைபெற்றது.
அந்த வகையில், கண்ணம்மா பேட்டையில் நடைபெற்ற முகாமில் ஏராளமானோர் தங்களுடைய செல்லப்பிராணிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அதனோடு, செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற, அதன் உரிமையாளர்கள் செல்லப்பிராணியுடன் புகைப்படம் எடுத்துத் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர்.
இதனிடையே உரிமம் பெற்ற செல்லப்பிராணிகள் மீது அதனுடைய நடவடிக்கைகளை கண்டறியும் வகையில் சிப்-களை பொருத்திக் கொண்டனர்.
















