காஞ்சிபுரம் கந்தகோட்ட முருகன் கோயிலுக்குச் சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் இந்து அமைப்பினர் வேல் பூஜை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தேய்பிறை சஷ்டி திதியை ஒட்டிக் காஞ்சிபுரம் கந்தகோட்ட முருகன் கோயிலுக்கு விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் மாவட்ட தலைவர் சிவானந்தம், வடமாவட்ட மாநில அமைப்பாளர் ராமன் ஜி உள்ளிட்டோர் வேலுடன் சாமி தரிசனம் செய்யச் சென்றனர்.
அப்போது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
















