சென்னை அடையாறில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞரை பெண் தூய்மைப் பணியாளர் துடைப்பத்தால் அடித்து விரட்டிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை ராயபுரத்தை சேர்ந்த பெண் தூய்மை பணியாளர் ஒருவர், நள்ளிரவு 2 மணியளவில் அடையாறு மேம்பாலம் அருகே பணி செய்துகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்குவந்த இளைஞர், தூய்மைப் பணியாளரிடம் அத்துமீற முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கையில் இருந்த துடைப்பத்தால் இளைஞரை சரமாரியாக அடித்து விரட்டினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தலைநகர் சென்னையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சம்பவம் தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பெண் தூய்மைப் பணியாளர், அத்துமீறிய இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றங்களை மூடி மறைப்பதிலேயே அரசு மும்முரம் காட்டுவதாகவும் தெரிவித்தனர்.
















