புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதுச்சேரி அரசு மற்றும் ஆரோவில் அறக்கட்டளையின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு, ஆரோவில் இலக்கிய விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
விழா ஒருங்கிணைப்பு, திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த விழா, ஸ்ரீ அரவிந்தரின் 150ஆவது பிறந்த நாள் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
மரம் நடும் நிகழ்வின்போது, ஸ்ரீ அரவிந்தர் அன்னை ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நடபெற்ற நிகழ்வில், ஆரோவில்லின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், பாரத் நிலையம், கலைகேந்திரா மற்றும் தமிழ் பாரம்பரிய மையம் ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
















