நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அறநிலையத்துறை அதிகாரிகளைக் கண்டித்து கிராம மக்கள், குளத்தில் குடியேறி சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலியார்பட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 5 ஏக்கர் 56 செண்ட் விளைநிலத்தை வடமலைசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஜான் ஜோசப் என்பவர் போலி ஆவணங்கள்மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர் அந்த விளை நிலத்தில் வேலி அமைக்க முயன்றதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த நிலத்தைத் தனியார் நபருக்குக் கொடுத்ததாகக் கண்டனம் தெரிவித்து, முதலியார்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர், குளத்தில் குடியேறி சமையல் செய்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
















