சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஒற்றை டிஷ் ரேடியோ தொலைநோக்கிமூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்சர்கள் எனப்படும் அதிவேகமாகச் சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சீனாவின் குய்ஷோவில் உள்ள இந்த 500 மீட்டர் துளை கோள ரேடியோ தொலைநோக்கி ஆழமான விண்வெளி ஆய்வுகளில் முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
பிரபஞ்சத்தைக் காணும் கண்கள் என்று வர்ணிக்கப்படும் மனித குலத்தின் இந்தச் சாதனம், விண்வெளியின் மர்மங்களை வெளிக்கொணர்வதில் மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறது.
2016 ஆம் ஆண்டுச் செயல்பாட்டுக்கு வந்த இந்தத் தொலைநோக்கி, சோதனைகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆராய்ச்சியாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் திறந்து விடப்பட்டது.
இந்தத் தொலைநோக்கி தொடங்கப்பட்டதிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பல்சர்கள் எனப்படும் அதிவேகமாகச் சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் அடையாளம் கண்டுள்ளது.
விண்வெளி குறித்த மனித குலத்தின் அறிவை விரிவாக்குவதிலும், வேற்றுக்கிரக வாசிகள் குறித்த சமிக்ஞைகளைக் கண்டறிவதிலும் இந்தத் தொலைநோக்கி முக்கியப் பங்கு வகிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
















