அமெரிக்காவில் நிதி மசோதா முட்டுக்கட்டை காரணமாக அத்தியாவசிய அரசு துறைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து உள்ளன.
அத்தியாவசிய பணியாளர்களாகக் கருதப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு காவலர்கள் உட்பட 13 ஆயிரம் பேர் ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஊதியம் இல்லாததாலும், அதிக பணிச்சுமையாலும் விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு வராமல் விடுப்பு எடுப்பது அதிகரித்துள்ளது. இதனால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
















