கனடாவில் பனிக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகள் வெண்போர்வை போற்றியது போல் காட்சியளிக்கிறது.
கனடாவில் நவம்பர் மாதத்தில் பருவத்தின் முதல் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் அந்நாட்டின் பல்வேறு நகரங்கள் வெண்பனியால் மூடப்பட்டுள்ளது.
டொரன்டோ நகரில் முதல் பனிப்பொழிவின் அழகை ரசித்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
பனிப்பொழிவால் போக்குவரத்து தாமதம் ஏற்படக்கூடும் என்று கனடா அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கார்களில் படர்ந்திருந்த பனியை பொதுமக்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போத பனிப்பொழிவு அதிகளவில் இருந்ததால் பார்வையாளர்களும் விளையாட்டு வீரர்களும் அவதிக்குள்ளாகினர்.
மைதானத்தில் பனி தேங்கியதால் தடைபட்ட நிலையில் பனியை அகற்றிய பிறகு போட்டி தொடர்ந்தது.
















