சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஏரியில் நெல் மற்றும் மீன் ஒன்றாக வளர்க்கப்படும் முறை வைரலாகி உள்ளது.
மத்திய சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஏரியில் பிளாஸ்டிக் அல்லது ரப்பரால் செய்யப்பட்ட பலகையில் மண்ணை நிரப்பி, அதில் நெற்பயிர்களை நட்டு வைத்து விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏரியில் உள்ள மீன்கள் நெற்பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் களைகளை உணவாக உண்கின்றன. இதனால் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் தேவை வெகுவாகக் குறைகிறது.
மீன்கள் வயலில் நீந்தும்போது, அவை மண்ணைத் தளர்த்துகின்றன. அத்துடன், தங்கள் இயக்கத்தின் மூலம் தண்ணீரை ஆக்ஸிஜனேற்றம் செய்து, பயிர்கள் செழித்து வளரத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.
மீன்களின் கழிவுகள் வயலுக்குத் தேவையான இயற்கை உரத்தை வழங்கி, பயிரை வளப்படுத்துகின்றன. இந்த ஒருங்கிணைந்த வளர்ப்பு முறை, பாரம்பரிய விவசாய முறைகளைவிடப் பல மடங்கு நன்மைகளை வழங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
















