டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள்குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
1996 ஆம் ஆண்டு மே 25ம் தேதி லஜபத் நகர் பகுதியில் ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிக் பிரண்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
2000 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டைபகுதியில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2001 ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர்உயிரிழந்தனர்.
தீவிரவாதிகள் 5 பேர்கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 9-ல் சரோஜினி நகர், பஹார்கஞ்ச், கோவிந்தபுரி உள்ளிட்ட பகுதிகளில் 3 வெடிகுண்டுகள் ஒரேநேரத்தில் வெடித்தன.
இதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ல் கரோல் பார்க், கிரேட்டர் கைலாஷ் மற்றும் கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட சந்தைகளில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு 5 தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தியது.
இதில் 30-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர், 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ல் டெல்லி உயர் நீதிமன்ற வாயிலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
















