தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான பொய் பிரசாரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை முதலிபாளையத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் சட்டமன்ற தேர்தல்குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடிக்கு நற்பெயர் வந்து விடக் கூடாது என மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைத் திமுக தடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான பொய் பிரசாரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
















