பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனம் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டித்தர உள்ளது.
இதற்கான கல்வெட்டு திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். பின்னர் பேசிய அவர், பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
















