பாகிஸ்தானின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலும் நிராகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலும் நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் ராணுவத்தின் தூண்டுதலால் நிகழும் அரசியலமைப்புச் சட்ட மீறல் மற்றும் அதிகார கைப்பற்றல் உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து சொந்த மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக அவர் விமர்சித்தார்.
சர்வதேச சமூகம் இந்த உண்மையை நன்கு அறியும் எனவும் பாகிஸ்தானின் சூழ்ச்சியை யாரும் நம்ப மாட்டார்கள் எனவும் ரந்தீர் ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
















