ரஷ்யாவை சேர்ந்த அமினா ஃபைண்ட்ஸ் என்ற Content Creator இந்தியாவில் கேரளாதான் தனக்கு பிடித்த மாநிலம் எனத் தனது இன்ட்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள சுற்றுலா தலங்கள், மக்களின் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அறிந்து அதனை வீடியோவாக எடுத்து Content Creatorகள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ரஷ்யாவை சேர்ந்த அமினா ஃபைண்ட்ஸ் என்ற Content Creator இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் தனக்கு மிகவும் பிடித்த மாநிலம் கேரளாதான் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கேரளாவில் அவர் சென்று வந்த பகுதிகளின் வீடியோக்களைப் பதிவிட்ட பின், தூய்மை மற்றும் அமைதியான சுற்றுச்சூழல் ஆகியவற்றால் கேரளா தன்னை கவர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த Content Creator கேரளாவின் அழகு, விருந்தோம்பல் மற்றும் சமூக அமைதி ஆகியவற்றை பாராட்டி இருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
















