நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கோயிலில் புகுந்த நபர், சாமி சிலையில் இருந்த நகையைத் திருடிச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது.
பொய்கைநல்லூரில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் நடையை இன்று காலை அர்ச்சகர் திறந்து உள்ளார்.
அப்போது சுவாமி சிலையில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அங்கு உள்ள சிசிடியை ஆய்வு செய்தபோது, சாமி சிலையில் இருந்த நகையை ஒருவர் திருடியது உறுதியானது.
இதேபோல் அப்பகுதியில் உள்ள மற்றொரு கோயிலிலும் அந்த நபர் திருட முயன்ற காட்சி வெளியாகி உள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சியைக் கொண்டு கொள்ளையரைப் போலீசார் தேடி வருகின்றனர்
















