டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், காயமடைந்த அனைவரும் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சதிச்செயலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாகப் பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளை வழங்கவும், விசாரணையைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
















