கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த நபர்கள், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கரூர் கூட்ட நெரிசல் விவகார வழக்கை அக்டோபர் 17ம் தேதி முதல் சிபிஐ விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் 4பேர், இன்று கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
















