டெல்லி கார் வெடிப்பு எதிரொலியாகப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கார் வெடிப்பில் காயமடைந்தவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, கார் வெடிப்புச் சம்பவம் எதிரொலியாகப் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் கூடியது.
கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
















