வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை வஞ்சிக்கின்ற சாடிஸ்ட் அரசாக திமுக அரசு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிவித்தார். திமுக அரசு ஒரு மசோதாவைக் கொண்டு வருவதும், அதைத் திரும்பப் பெறுவதும் வழக்கம் என்றும் அவர் கூறினார். தேர்தல் வாக்குறுதிகள்படி ஓய்வூதிய பலன்களை வழங்கவில்லை என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
















