அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும், அடுத்தாண்டுக்கான செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் எம்பிக்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததால், மசோதா நிறைவேறாமல் கடந்த 43 நாள்களாக அரசுத் துறை முடங்கியிருந்தது.
சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, இந்த மசோதா செனட் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைதொடர்ந்து, ஓவல் அலுவலகத்தில் செலவீனங்களுக்கான மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
















