இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை காலை ஒன்பது முப்பது மணிக்குத் தொடங்கவுள்ளது.
இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதனையொட்டி இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஆல் ரவுண்டரான நிதிஷ்குமார் ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார்.
















