ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே தாயுடன் பழகிய நபரைக் கொலை செய்த மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வைராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, கடந்த 11ம் தேதி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனிடையே கிருஷ்ணசாமி, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் தாயாருடன் பேசிப் பழகி வந்ததாகவும் இதனால் கிருஷ்ணசாமியை கார்த்தி பலமுறை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் கிருஷ்ணசாமி கேட்காததால் அவரை, நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாகக் கார்த்திக் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
















