தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருவதால் போதுமான பணி ஆணைகள் இல்லாததால், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்பிலும் தேசிய அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில், ஒரு லட்சம் பேர் நகை செய்யும் தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் நகைகளுக்கான பணி ஆணைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் 40 ஆயிரம் பொற்கொல்லர்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் தங்க நகை தயாரிப்பு தொழிலில் பணியாற்றி வருவதாகவும், கொரோனா தொற்றுப் பரவலுக்கு முன் தினமும் சராசரியாக 200 கிலோ அளவுக்குத் தங்க நகையை வணிகம் செய்ததாகவும் கூறியுள்ளனர்.
2020ஆம் ஆண்டுபின் தொடர் தங்கம் விலை உயர்வு, இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருவதால் நகை தயாரிப்புத் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், நகைகளுக்குப் போதுமான பணி ஆணைகள் கிடைக்காததால் 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதாகவும் நகை தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
















