குஜராத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 5 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்ஐஏ தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தின் அகமதாபாத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளதாகவும், 4 பேரும் அல்கொய்தா அமைப்புக்கு நிதி திரட்டுதல், இளைஞர்களை அமைப்பில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான 4 பயங்கரவாதிகளிடம் இருந்து பல்வேறு ஆணவங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியா, மேற்குவங்கம், திரிபுரா, மேகாலயா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதான 4 அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள கூட்டாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை நடத்தி வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
















