அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் செர்பியாவில் ஹோட்டல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அமெரிக்க தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் 2017 முதல் 2021 வரை வெள்ளை மாளிகையில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார்.
இவர், ரியல் எஸ்டேட் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்நிலையில் இவரது நிறுவனமான அஃபினிட்டி பார்ட்னர்ஸ் செர்பியாவின் பெல்கிரேடில் ஹோட்டல் மற்றும் குடியிருப்பை கட்ட திட்டமிட்டுள்ளது.
முன்னாள் யூகோஸ்லாவிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமாக இருந்த இடத்தில் இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. 1999 ஆம் ஆண்டில் நேட்டோ குண்டுவீச்சில் சிதைந்த இந்தத் தலைமையக வளாகம், செர்பியர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த இடத்தில் குஷ்னர் ஹோட்டல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெல்கிரேடியில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நினைவுச் சின்னத்தை அழிப்ப முயல்வதை கண்டித்த பொதுமக்கள் கண்ட முழக்கங்களை எழுப்பினர்.
















