சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் குற்றம் செய்யத் தைரியம் எங்கிருந்து வருகிறது என்றும் தமிழக காவல்துறையும் தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது என்றும் கட்சி பணிகளுக்கான பயண செலவுகளுக்குக் கூட கட்சி பணத்தை நான் பெற்றதில்லை என்றும் எந்தத் தொழிலையும் செய்ய எனக்கு உரிமை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
டி.ஆர்.பாலு 2 முறை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த கார் சாராய ஆலை நிறுவனத்தின் பெயரில் உள்ளது என்றும் குறுக்கு விசாரணை செய்ய இருந்தேன், டி.ஆர்.பாலு வரவில்லை, அடுத்தமுறை கேட்பேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
















