ஒடிசா மாநிலம் கட்டாக்கில், தரையில் இருந்து மேலே நகரும்போது திடீரென ராட்டின ஊஞ்சல் செயலிழந்ததால், அதில் சிக்கித் தவித்த 8 பேரை மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
கட்டாக்கில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் பிரம்மாண்ட ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு ராட்டினத்தில் இருந்த ஊஞ்சல், தரையில் இருந்து 30 அடி உயரத்திற்கு சென்றபோது திடீரெனச் செயலிழந்தது.
இதனால் ஊஞ்சலில் இருந்த குழந்தைகள் உட்பட எட்டு பேர், கதறி அழ ஆரம்பித்தனர். இதனால் அங்குப் பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது.
தகவலறிந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின், ஊஞ்சலில் சிக்கித் தவித்த 8 பேரை ஹைட்ராலிக் லிப்ட் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
















