டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குத் திட்டம் தீட்டப்பட்ட அல் ஃபலா பல்கலைக்கழகம், 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபரால் தொடங்கப்பட்டது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
ஃபரிதாபாத் அல் ஃபலா பல்கலைக்கழகம்….மருத்துவர் என்ற போர்வையில் 7 கொடிய மிருகங்கள் நடமாடிய இடம். டெல்லி தீவிரவாத தாக்குதலுக்கு உடந்தையாகச் செயல்பட்டவர்களை உருவாக்கிய பயங்கரவாத மையம். இப்படி என்னென்ன வார்த்தைகளால் வசைபாடினாலும், அது அத்தனையும் அல் ஃபலா பல்கலைக்கழகத்திற்கு பொறுத்தமானதாகவே இருக்கும். ஏனென்றால் கல்வி எனும் பேராயுதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு, டெல்லியில் 13 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்திருக்கிறதென்றால், அந்தப் பல்கலைக்கழகத்தின் பின்னணி ஆராயப்பட வேண்டும் தானே?… அவ்வாறு ஆராய்ந்து பார்த்ததால் அது அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் 1997 -ம் ஆண்டில் நிறுவப்பட்டது அல் ஃபலா பல்கலைக்கழகம். அல் ஃபலா என்றால் அரபு மொழியில் சாதனை, வளர்ச்சி என்று பொருள். இதனை, மேம்போக்காகப் பார்த்தால் நல்ல விதமாகத் தான் தெரியும். ஆனால், இந்தப் பெயரை வைத்தவர் யார் என்பது புரியும் போது தான், எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது தெளிவுபடும். அல்ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனரான ஜாவத் அகமது சித்திக், அடிப்படையில் ஒரு விரிவுரையாளர்.
மத்திய பிரதேசத்தில் 1964 ஆம் ஆண்டு பிறந்த இவர், இந்தூரில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் குடும்பத்துடன் டெல்லிக்கு இடம் பெயர்ந்த அவர், 1993-ம் ஆண்டில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். ஆனால் , ஜாவத் அகமத் சித்திக் பெற்ற ஊதியம் அவரது குடும்ப செலவுக்குப் போதுமானதாக இல்லை. தனது சதோதரருடன் சேர்ந்து அல் ஃபலா எனும் பெயரில் முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கிய அவர், ஆசை வார்த்தைகள் கூறி, அலுவலக நண்பர்களை முதலீடு செய்ய வைத்தார்.
ஆரம்பத்தில் ஜாவத் அகமது சித்திக்கின் பேச்சுக்கு மயங்கிய அவர்கள், போகப் போக ஏமாற்று வேலை என்பதை புரிந்து கொண்டு காவல்துறையில் புகார் கொடுத்தனர். வசமாகச் சிக்கிக்கொண்ட அகமத் சித்திக் மீது மோசடி வழக்குகள் பதியப்பட்டு, 3 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
2004-ம் ஆண்டில் ஜாமினில் வெளிவந்த ஜாவத் அகமது சித்திக், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை கொடுக்காததால் மீண்டும் சிறை சென்ற சம்பவம் எல்லாம் நடந்துள்ளது. எதற்காக இந்த விவரங்கள் என்றால்….இப்படிப்பட்ட மோசடி பணத்தை கொண்டு தான், அல் ஃபலா பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துள்ளார் ஜாவத் அகமது சித்திக். 1997-ம் ஆண்டில் 54 ஏக்கரில் தொடங்கப்பட்ட அல் ஃபலா பல்கலைக்கழகம், 2014-ம் ஆண்டில் தான் பல்கலைக்கழக மானிய குழுவின் அனுமதி பெற்றுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் 2019-ம் ஆண்டில் மருத்துவ கல்வி தொடங்கப்பட்ட நிலையில், பெரும்பாலும் காஷ்மீரை சேர்ந்தவர்களே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். காரணம் காஷ்மீரை சேர்ந்தவர்கள் குறைந்த ஊதியத்திற்கு சம்மதம் தெரிவிப்பதே காரணம். டெல்லி தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் பலரும் ஷகீலும் காஷ்மீரை சேர்ந்தவர் என்பது இங்குக் கவனித்தக்க விஷயம்.
அல் ஃபலா பல்கலைக்கழகம், சிறுபான்மையினருக்கான கல்வி மையம் போல் அறியப்பட்டாலும், ஊடுருவிப் பார்த்தால் அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் கல்வி மையமாகச் செயல்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, மருத்துவர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் பலரும் அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பதுங்கியுள்ளனர்.
நவம்பர் 16-ல் பிறந்தநாள் கொண்டாட காத்திருந்த ஜாவத் அகமது சித்திக், தற்போது என்ஐஏ விசாரணை வளையத்திற்குள் சிக்கி இருக்கிறார். டெல்லி தீவிரவாத தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அல்ஃபலா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்திருந்தாலும், ஜாவத் அகமது சித்திக்கின் பின்னணி சந்தேகத்தை வலுக்க செய்கிறது என்றே கூற வேண்டும்.
















