சிவகங்கையில் விபத்தை ஏற்படுத்தி மூன்று பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த காவல்துறை வாகனம், காலாவதியாகிவிட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், அனஞ்சியூர் அருகே காவல் ஆய்வாளர் ஜெயராணி பயணம் செய்த காவல்துறை வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் மதுரையை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை என மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு காரணமாக காவல்துறை வாகனத்தின் பதிவு கடந்த மே 30ம் தேதியுடன் காலாவதியாகியுள்ளது. மேலும் இன்சூரன்ஸ் கடந்த 2018ம் ஆண்டே முடிந்துள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் பெற்றுத் தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















