ஆந்திராவில் காட்டு யானைகளிடமிருந்து விளை நிலத்தைப் பாதுகாக்க முயன்ற விவசாயி, காட்டு யானைகள் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிட்டப்பா. இவர் தனது நிலத்தின் பயிர்களை யானைகளிடமிருந்து காப்பதற்காக வயலில் இரவு நேரத்தில் காவலுக்கு இருந்தார்.
அப்போது அங்கு வந்த யானைகள், கிட்டப்பாவை தாக்கிக் கொன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், காட்டு யானைகளிடமிருந்து தங்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















