பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி அரசுமீதான மக்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாக்குவங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களை ஆதரித்தவர்களை, பீகார் மக்கள் முழுமையாகப் புறக்கணித்து உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதையே பீகார் தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது என்றும் SIR நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களை பீகார் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
















