தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாகவே திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளதாக பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம் செய்துள்ளார்.
கடலூர் முதுநகர் பகுதியில் பாஜக பொருளாதார பிரிவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில அமைப்பாளர் காயத்ரி சுரேஷ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் திமுக அளித்த வாக்குறுதிகளையும், திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருப்பதால் அக்கட்சியின் மதிப்பு பூஜ்ஜியமாகவே உள்ளது என தெரிவித்தார்.
















