சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 520 ரூபாய் சரிந்து, 92 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் முழுவதும் ஏறுமுகமாகக் காட்சியளித்த தங்கத்தின் விலை, யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத வகையில் 97 ஆயிரத்து 600 ரூபாய் வரை உச்சத்தை எட்டியது.
ஒரு லட்சத்தை எட்டிவிடும் எனப் பலரும் அஞ்சியபோது, ஒரு கட்டத்தில் படிப்படியாகக் குறைந்து 89 ஆயிரம் ரூபாய் வரை வந்தது. பின்பு, நாளுக்கு நாள் ஏறவும் இறங்கவுமாக இருந்த தங்கம் விலை, நேற்றும் இன்றும் இறங்குமுகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 280 குறைந்த தங்கத்தின் விலை, இன்று மீண்டும் ஆயிரத்து 520 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி, இன்றைய தங்கம் விலை ஒரு கிராம் 11 ஆயிரத்து 550ஆகவும், சவரன் 92 ஆயிரத்து 400ஆகவும் உள்ளது.
மேலும், வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து 175 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
















