மதுரையில் ரயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை போடிலைன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான சுகன்யா, தண்டவாளத்தை ஒட்டி நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாகச் சென்ற ரயில் மோதியதில் மாணவியின் கை முழுவதுமாக நசுங்கி சேதமடைந்தது.
இதனையடுத்து, மாணவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தண்டவாளத்தை ஒட்டி இருக்கக்கூடிய குடியிருப்புகள் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















